DETAILS
This forum is brought to you by AGAM Theatre Lab in collaboration with the Intercultural Theatre Institute (ITI).
Date : 3rd August 2019
Time : 10 am to 1 pm
Venue : Intercultural Theatre Institute
Tickets : Free with registration
Briefly, this forum aims to offer a platform for ongoing dialogues between Tamil and Intercultural Theatre makers in Singapore with the intention of a deep discourse on ways to improve collaboration and creative expression. Our panelists and topics to be covered include:
1. The need for Theatre for Seniors
by Mr R Somasundaram
2. What Do We See, an Audience & Observers Perspective
by Mr Rethinavel
3. The Need to Embrace Bilingual Practice
by Miss Grace Kalaiselvi
4.Tamil Theatre Future's Creative Direction
by Mr Vadivazhagan PVSS
Moderated by Mr Karthikeyan Somasundram
OFFICIAL TRANSCIPT OF THE FORUM
CLICK ON THE VIDEO BELOW FOR FULL VIDEO OF THE FORUM
POST EVENT COVERAGE
TAMIL MURASU 18.9.19
MEDIACORP NEWS
REVIEWS
Overall, the forum was well received by those who attended. The insightful questions asked on the floor and the slido application was a testament to the enriching discussion that happened in the morning. Many went home with the fulfilment and motivation to create a change concerning the domain they were involved in. This was what the team envisioned and was happy that the outcomes were met. A compilation of the findings and discussions will be transcribed and sent to the National Arts Council and various Tamil theatre groups. The team is now crowdsourcing for future speakers and topics in the next edition of this forum.
The following are some of the reviews and comments from those who attended
Santha Bhasker (Cultural Medallion)
I was glad that I came. Matters such as: How can we go forward and have dialogue with positive and negative opinions and help our Artists? How can we educate the audience? How can we help our full time artists and other young artists? I like to be part of this open conversation
Kamaladevi Aravindan(Veteran poet, writer)
இருபது ஆண்டுகட்கு முன்பு, மலையாள நாடகாசிரியராக, இயக்குனராக இயங்கிய காலகட்டம் எனது இலக்கிய வாழ்வில் பொற்காலம்.,அன்று நான் அறிந்ததெல்லாம் குறிப்பிட்ட சில அமைப்புக்களும் நாடக இயக்கங்களும் மட்டுமே.ஆனால் இன்றைய இளையர்கள் என்னமாய் இயங்கி வருகிறார்கள் அவர்களில் முக்கியமானவர் இளையர் சுப்ரமணியம் கணேஷ்.நாடகவாதி எனும் நிகழ்வினை ஒருங்கிணைத்து அனைத்து நாடகாசிரியர்களையும் ஒரே கூட்டில் நிறுத்தி அற்புதமாய் நிகழ்வினை நடத்திக்காட்டிய இந்த இளையருக்கு ஒரு பொன் தூவல்.
Aishwarya Shanmuganathan (Fulltime story telling artiste)
Great initiative by Agam Theatre Lab. These sessions provide theatre practitioners from the tamil speaking community a platform to think critically, inquire, engage in healthy discourse, share and unpack matters that impact us all. Looking forward to many more transformative dialogues.
Arun Mahizhnan (Special Research Adviser IPS,NUS)
Today's symposium was a landmark. Good start. I wish you the best!
Paalu Manimaran (Writer)
Glad I did attend. Great initiative by Subramanian Ganesh and team. Hope to hear more meaningful discussions in future, in Tamil! Very Weĺl organized. All did well. Keep going.
MD. Ami (Artiste)
The session was very productive. Looking forward to more projects from Agam.
ekha Anbalagan (Artiste)
It was a pleasure being there! Thank you for the initiative and the efforts. Looking forward for future events!
AP Raman (Veteran writer)
சிங்கப்பூரில் நாடகக் கலையை மேம்படுத்தும் முறைகள் பற்றி அடிக்கடி நம் இளைய வட்டம் ஆர்வம் காட்டி அத் துறை சார்ந்தவர்களை அழைத்து ஆராய்வது ஒரு நல்ல முயற்சி. அண்மையில் துவக்கப்பட்ட அகம் தியேட்டர்ஸ் அமைப்பு, உள்ளூர் நாடகங்கள் பற்றிய பலனுள்ள கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.அத்துறை சார்ந்த ரே.சோமசுந்தரம், டி.சசிதரன், கலைசெல்வி, எஸ்.ரெத்தினவேல், வடிவழகன் பிவிஎஸ்எஸ் ஆகியோர் தங்கள் அனுபவங்களை சுவை ததும்ப எடுத்துக் கூறினர். சிங்கையின் நாடக வளர்ச்சிக்கு நீண்ட காலப் பெருமை சேர்த்து வரும் மூத்த நாடக ஆசிரியர் எஸ்.எஸ்.சர்மா, வரவேற்பு உரை வழி சிங்கை நாடகப் பழஞ்சுவைகளை நினைவுபடுத்தினார். முதியோர்களை உள்ளடக்கிய சில நாடகங்களை மேடை ஏற்றுவதின் வழி, புதிய ரசனையை உருவாக்குவதுடன், அரசின் ஆதரவையும் பெற இயலும் என நவரச நாயகன் ரே.சோமசுந்தரம் குறிப்பிட்டார். ஆங்கில மேடைகளில் ஆழ்ந்த அனுபவம் கண்ட டி.சசிதரன், சிங்கப்பூர் மேடைகளில் நம் நாடகங்கள் பெற்று வரும் அங்கீகாரங்களை எடுத்துச் சொன்னார். இரு மொழி நாடகக் கொள்கையின் அவசியத்தை அழகாக உணர்த்தினார், நாடக அனுபவம் அதிகம் கண்ட கலைச்செல்வி. அறைய நாடகங்கள் சமுதாய உணர்வோடு படைக்கப்பட்டதை நினைவு படுத்தினார். நடிப்புத் துறையின் அனுபவக் களஞ்சியம் வடிவழகன், சமூகப் பார்வைக்கு நம் நாடகங்கள் இன்று அதிக அளவில் கொண்டு வரப்படுவதை எடுத்துக் காட்டினார்.அதிபதி குழு, அவாண்ட் அமைப்பு, சசிரேகா, ஏ.கே.டி போன்ற குழுக்கள் நம் நாடகங்களை இளையர் பார்வைக்கு எடுத்துச் சென்று வெற்றி கண்டிருப்பதை விவரித்தார். ஆங்கிலப் பத்திரிக்கையின் தவறான விமர்சனங்களையும் அவர் கண்டித்தார். நடிப்புத் துறை அனுபவம் நிறையக் கண்ட கலைஞர் கார்த்திகேயன் ஆங்கிலம்-தமிழில் நிறைவு தரும் நெறியாளராகப் பணியாற்றினார். அகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் கணேஷ் நன்றிகூற, நிகழ்வு முடிவுக்கு வந்தது.
SS Sarma (Veteran Theatre Practitioner)
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கும் ஈடு கொடுக்கும் தமிழ் நாடகக் கலை!
தமிழ் நாடகக் கலை புத்தாக்கச் சிந்தனைக்கும் நவீன தேவைகளுக்கான நடைமுறைக்கும் ஒரு தனி எழுச்சியைச் சிங்கப்பூர் ஏற்படுத்தி இருக்கிறது.! கடந்த 3-8-2019ல் “நாடகவாதி” என்ற தலைப்பில் அண்மையில் இளைய தலைமுறையினரால் தொடங்கப்பட்ட அகம் தியேட்டர்ஸ் குழுவினர், இண்டர்லெக்சுவல் தியேட்டர் இன்ஸ்டிட்டியூட் என்ற அறிவார்ந்த அரங்க நாடகக் குழு ஆகியவை மேடைக் கலைப் படைப்பாற்றலில் திறன் காட்டி மேம்படுத்தும் வழிவகைகளைக் காண விழைந்து முனைந்து செயல்பட்டனர். இதில் பட்டறிவு பெற்ற இளைய தலைமுறை யினர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் இரு மொழி இணைப்புடன் இதன்அணுகுமுறைகளை இவர்கள் கையாண்ட விதம் மிகவும் நேர்த்தியாக அமைந்தது பாராட்டுக்குரியது. தொலைக்காட்சி நடிப்புப் புகழ் கார்த்திக் சோமசுந்தரம் திறம்பட வழி நடத்த ஆங்கில வரவேற்புரையைத் தொடர்ந்து இதழாசிரியர், நாடகக் கலை முன்னோடியான எஸ். எஸ். சர்மா தமது வரவேற்புரையில், 54ம் ஆண்டுத் தேசிய தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் சிங்கப்பூரின் நான்கு மொழிக் கலை, கலாச்சார வளர்ச்சியில் தமிழ் மேடை நாடகங்களின் நிலை, எதிர்காலத் தேவைகள் பற்றி ஒருங்கிணைந்த ஓர் ஆய்வினைக் காண இருக்கின்றோம் என்றார்.. தமிழ் நாடக, ஊடகக் கலை நுட்பத் துறைகளில் திறன் வாய்ந்த வல்லுநர்களின் கருத்துகளை அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பினை இந்தக் கருத்தரங்கில் எதிர்பார்க்கலாம் என்றதும் அனைவரின் ஆர்வமும் அவர்களை நாடியது! சர்மா ஆற்றிய முன்னுரையில் மேடை நாடகக் கலையின் இன்றைய நிலையைக் குறிப்பிட்டார்! “ஊரிலிருந்து கொண்டுவந்து நடத்தப்பட்ட நாடகங்கள், உள்ளூரில் தயாரித்து அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் எனச் சிங்கப்பூர் மேடைகளை அமர்க்களப்படுத்திய காலம் ஒன்று இருந்தது. நானே 25 மேடை நாடகங்களை எழுதி, இயக்கித் தயாரித்து, சிங்கப்பூரில் மட்டுமல்லாது வெளிநாடு களுக்கும் கொண்டு சென்று நடத்தி இருக்கிறேன். அதை “நாடகம் நடத்தினோம்!” என்ற 750 பக்கங்கள் கொண்ட நூல் வடிவில் தொகுத்துச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டேன். இது போன்று பல சாதனைகளைச் செய்தோரை மறக்க முடியுமா? ஆனால் இன்றைய நிலை என்ன? மரபு சார்ந்த மேடை நாடகக் கலை, அருகி, மறைந்து விடுமோ என்ற அவல நிலையை அடைந்திருக்கிறது. “ஆனால் அப்படி நிகழாதிருக்க ஈராண்டுகளுக்கு முன்னர் தமிழ் மரபுடைமைக் கழகமும் தேசிய நூலகமும் இணைந்து சிங்கப்பூரில் அரங்கேறிய நாடகங்களையும் நாடக வடிவங்களையும் இலக்கியங்களையும் நவீன இலத்திறன் கணினியின் தொழில் நுட்பத்தில் பதிவு செய்திருக்கின்றனர். இப்படிப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிங்கப்பூர் நாடக வரலாற்றை உலகளாவிய நிலையில் எங்கிருந்தும் இலவசமாகப் பெற்று அறிந்துகொள்ளும் வாய்ப்பினை வழங்கியிருக்கிறார்கள். இந்த அரும் சாதனையைச் செயல்படுத்தி நடைமுறைப்படுத்தி இருக்கும் முனைவர் திரு. அருண் மகிழ்நன் அவர்களின் அயராப் பணியை என்றும் மறக்க முடியாது. அருண் மகிழ்நன் அவர்களுடன் கணேசன் சுப்பிரமணியம், ஷர்மினி செல்லபாண்டி, சுந்தரி பாலசுப்ரமணியம் ஆகியோரும் அரும்பங்காற்றி இருக்கின்றனர். மின்னியல் தொழில் நுட்பத் திறனைக் கொண்டு நாடகக் கலைக்குப் புத்தாக்கம் தந்தவர்கள் இவர்கள்” என எஸ். எஸ். சர்மா தமது முன்னுரையில் கூறினார். அடுத்து வானொலி, தொலைக்காட்சி, மேடைக்கலை ஆசானாகப் புகழ்பெற்றவரும் கலைத்துறை முன்னோடியாக, வாழ்நாள் சேவை விருதுபெற்றவருமான ஆர். சோமசுந்தரம் அவர்கள் மூத்த கலைஞர்களின் ஓய்வு காலத்தைப் பயனுள்ளதாக்க நாடகம், மற்றும் கலைத் துறையில் அவர்களை ஈடுபடுத்த ஓர் அமைப்பைத் தோற்றுவிப்பது இன்றியமையாத் தேவை என்பதை வலியுறுத்தினார். கலாச்சாரத் தொடர்புக் கலை நிலையத்தின் இணை நிறுவனரும் இயக்குநருமான டி.சசிதரன் சிங்கப்பூரின் புகழ்பெற்ற கலைப் படைப்பாளர். கலாச்சாரப் பதக்கம் பெற்றவர். டோமினிக் குடியரசில் 12 ஆண்டுகளாக யுனெஸ்கோ என்ற அனைத்துலகப் புகழ்பெற்ற கலாச்சாரப் பரிவர்த்தனையில் பங்காற்றிவரும் சசிதரன் தாம் பெற்ற ஆழ்ந்த கலை உலக அநுபவங்களை முன்வைத்தார். தமிழின் கலைத் திறன் பன்னாட்டு, பன்மொழியினரின் பாராட்டை எட்டிப் பிடித்திருப்பதை அவர் உரை மூலம் அறிந்து பெருமிதப்பட்டோம்! வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகப் புகழ் வடிவழகன் இளைய தலைமுறையினரின் கலைத்துறை வழிகாட்டியாகத் திகழ்பவர். தமது வழக்கறிஞர் பணிகளின் பரபரப்புகளுக்கிடையேயும் கலைமீது கொண்டிருக்கும் நாட்டத்தை நன்கு அறிய முடிந்தது. அவர் எழுதி, இயக்கிய நாடகங்கள் மூலம் அனைத்துலக விருதுகளையும் பெற்றவர். சிங்கப்பூரின் நாடக சாதனைகளை விரிவாக முன்வைத்தார். தமிழில் மட்டுமல்லாது ஆங்கில மொழியிலும் கையாண்ட மேடைக் கலை உத்திகளை வடிவழகன் சுவைபட விவரித்தார். தொடர்ந்து தேசியக் கல்விக் கழகத்தில் நாடகக் கலைத் துறையில் விரிவுரையாளராக இருக்கும் எஸ். ரத்தினவேல், நாடகத் துறையில் கதை வசனம் இயக்கம் பற்றிய ஆய்வுகளில் அனைத்துலகத் தரம் வாய்ந்த படைப்புகளை வழங்கிய கலைச்செல்வி கிரேஸ் ஆகியோரின் பேருரைகள் நாடகக் கலையின் இன்றைய முற்போக்கான சிந்தனைத் திறனை வெளிப்படுத்தின. நடிப்புத் துறையில் பட்டறிவு பெற்றவரும் அநேக மேடை, வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவரும், படைப்பாளியுமான கார்த்திகேயன் சோமசுந்தரம் இனிய உரையுடன் நிகழ்ச்சிகளைக் கவரும் விதத்தில் வழி நடத்தினார்! இந்த ஆய்வரங்கில் ஆவலைத் தூண்டிய இறுதிப் பகுதி வந்திருந்தோர் தங்கள் கருத்துகளையும் மேடைக் கலை எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்த வழங்கப்பட்ட வாய்ப்புதான்! இன்றைய தமிழ், ஆங்கில மொழிக் கலைப் படைப்புகள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் சாதிக்க வேண்டியவற்றையும் முன்வைத்தனர்! கலாச்சாரப் பதக்கம் பெற்ற நடனக் கலை முன்னோடியான திருமதி சாந்தா பாஸ்கரின் கருத்துகள் கவனத்தைக் கவர்ந்தன. படைப்பிலக்கிய முன்னோடி, சமூகச் சிந்தனையாளர் ஏ.பி.ராமன், மேடை, தொலைக்காட்சி புகழ் மூத்த கலைஞர் ஜெயராமன், மற்றும் இளைய தலைமுறை ஆர்வலர்களும் வருகையளித்து ஆக்கமூட்டினர்! தமிழ் மேடை நாடகக் கலையில் தமிழ் வட்டத்திலேயே வலம் வந்த என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் நாடகங்களின் மறுபக்க வளர்ச்சியை நன்கு அறிந்துகொள்ள ஓர் அரும் வாய்ப்பை இந்த ஆய்வரங்கு வழங்கியது. இளைய தலைமுறையினர் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழி வடிவங்களிலும் அனைத்துச் சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கிச் சாதனைகள் செய்து வருகின்றனர். அதனை வரவேற்போம். அவர்களின் ஆங்கிலப் படைப்புகளில் பிற இனத்தவர்களின் பங்களிப்புடன் நல்லாதரவையும் தந்து உதவுவது தமிழ்க் கலைக்கு ஒரு புத்தாக்கச் சக்தியைத் தருகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது! இந்தத் துறையில் அகம் தியேட்டரும் ஐடிஐ என்ற கலாச்சார ஒன்றிய அமைப்பும் மேலும் ஆக்ககரமான பங்காற்ற இளையர்களின் ஆதரவு இன்றியமையாத் தேவையாகும். சிங்கப்பூரின் நான்கு மொழிப் பிரிவில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தமிழ் மேடை நாடகப் படைப்புகளின் நிலையை அறிந்துகொள்ள முடிந்தது. இயல், இசை போன்ற இதர நுண்கலைகளின் நிலையையும் மேம்படுத்த இது போன்ற ஆய்வரங்குகள், இளையர்களின் பங்களிப்பு வழி காண விழைவோம்! திரு. அருண் மகிழ்நன் அவர்களுடன் கணேசன் சுப்பிரமணியம், ஷர்மினி, கிரேஸ் கலைச்செல்வி…. ….போன்று இன்னும் பலர் இணைந்து தமிழ்க் கலை வளர்ச்சிக்கு அறிவியல், மின்னிலக்கத் தொழில் நுட்ப எழுச்சியும் புதிய மறுமலர்ச்சியும் ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர். தமிழின் கலைச் சிறப்பைக் கணித்துப் புதிய பரிமாணத்தில் மேலும் ஆக்கமூட்டும் திட்டங்களுடன் செயல்படுத்த முனையும் இளைய தலைமுறையினரை வாழ்த்தி வரவேற்போம்!